நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்: ஆளுநருக்கு சு.வெங்கடேசன் பதில்!

திராவிட மாடல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். 

News image

எம்பி சு. வெங்கடேசன்

Updated On :4 மே 2023, 8:21 am

DIN

திராவிட மாடல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில், திராவிட மாடல் குறித்து கடுமையாக விமரிசித்துள்ளார். 

அதில், 'திராவிட மாடல் என்ற காலாவதியான கொள்கையை வைத்து திமுக ஆட்சி செய்து வருகிறது. அது செத்துப் போன தத்துவம். மேலும் திராவிட மாடல் ஒரே நாடு, ஒரே கொள்கைக்கு எதிரானது' என்று பேசியுள்ளார். 

இதற்கு பதில் அளித்துள்ள மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன்,  'திராவிட மாடல் செத்துப் போன தத்துவம், மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது, பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்' என்று சொல்லும் ஆளுநர் அவர்களே!

களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்.' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.