சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மெட்ரோ ரயிலில் இனி இந்த வசதி இல்லாமல் போகலாம்.. 

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
மெட்ரோ ரயிலில் இனி இந்த வசதி இல்லாமல் போகலாம்..
Updated On :4 மே 2023, 7:32 am

DIN


சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது முதல், பயணிகள் தங்களது சிறிய அல்லது மடக்கும் வகையிலான சைக்கிள்களை ரயிலில் கொண்டு செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மெட்ரோ ரயிலின் சிறப்பு வகுப்புப் பெட்டியில் பயணிக்கும் பயணிகள் மட்டும், தங்களது சைக்கிளை ரயிலில் எடுத்துச் செல்ல வசதி கொடுக்கப்பட்டது. அதிலும், அந்தப் பெட்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால்தான். ஆனால், தற்போது அந்தப் பெட்டிகள் மகளிர் மட்டும் பெட்டிகளாக மாற்றப்பட்டதாலும், மெட்ரோ ரயிலில் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருப்பதாலும் இந்த சேவையை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, நாள் ஒன்றுக்கு மெட்ரோ ரயிலில் 2.2 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கடந்த ஏப்ரலில் மட்டும் 67 லட்சம் பேர் பயணித்திருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.