கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆம்பூர் அருகே துணை மின் நிலையத்தில் மின் கசிவால் தீ: 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின

ஆம்பூர் அருகே துணை மின் நிலையத்தில் மின் கசிவு ஏற்பட்டு வெடித்து தீப்பற்றி எரிந்ததை அடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

News image
Updated On :10 மே 2023, 3:42 am

DIN


ஆம்பூர் அருகே துணை மின் நிலையத்தில் மின் கசிவு ஏற்பட்டு வெடித்து தீப்பற்றி எரிந்ததை அடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையொட்டி விண்ணமங்கலம் 230/110 கிலோ வாட்  துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து ஆம்பூர் நகர பகுதி மற்றும் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென துணை மின் நிலையத்தில் மின் கசிவு ஏற்பட்டு வெடித்து தீப்பற்றி எரிந்து வருவதைக் கண்டு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சடைந்து ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் ஆம்பூர் , மின்னூர், விண்ணமங்கலம், அய்யனூர், கென்னடிகுப்பம், புதூர், பெரியாங்குப்பம், நாச்சார்குப்பம், ஆலாங்குப்பம், சோலூர், காட்டுகொல்லை, கம்மியம்பட்டு புதூர், தேவலாபுரம், கரும்பூர், குமாரமங்கலம், வீராங்குப்பம், மேல் சான்றோர்குப்பம், தென்னம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.