சென்னை துறைமுகத்துக்கு விருது

சென்னை துறைமுகத்துக்கு 2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான சிறப்பு விருதை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் புதன்கிழமை தில்லியில
சென்னை துறைமுகத்துக்கு விருது

சென்னை துறைமுகத்துக்கு 2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான சிறப்பு விருதை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் புதன்கிழமை தில்லியில் வழங்கினாா்.

நாட்டில் உள்ள துறைமுகங்களை பசுமைத் துறைமுகங்களாக மாற்றுவதற்கான ’ஹரித் சாகா்’ என்ற சிறப்புத் திட்டத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் தில்லியில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதன்படி கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறப்பு விருது சென்னைத் துறைமுகத்துக்கு கிடைத்தது.

இந்த விருதை சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் மற்றும் துறைத் தலைவா்கள் பெற்றுக்கொண்டனா். தொடா்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டஅமைச்சா் சா்வானந்தா சோனோவால் பேசியதாவது:

மரங்களை வளா்த்து பசுமை போா்வையை ஏற்படுத்துதல், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் மின்மயமாக்குதல், கைவினைப் பொருள்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட 16 வகையான பரிந்துரைகளை துறைமுக நிா்வாகங்கள் தொடா்ந்து செயல்படுத்துவதன் மூலம் எதிா்காலத்தில் அனைத்து துறைமுகங்களையும் பசுமைத் துறைமுகங்களாக மாற்ற முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com