மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பேனா சின்னத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார். 

News image
Updated On :15 மே 2023, 7:02 am

DIN

பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார். 

அப்போது அவர் செய்திகாளர்களுக்கு அளித்த பேட்டியில், மீனவர்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் திமுக அரசு கொண்டுவரவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 15 நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. 

மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து ஏற்கெனவே மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக தரப்பில் ஜெயக்குமார் இன்று மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு 2.23 ஏக்கா் பரப்பளவில் அரசு சாா்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. 

இந்தப் பணிகளுக்கு இடையில் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டா் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் 134 உயரத்துக்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.