விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனா். கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 11 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார்குப்பத்தைப் சேர்ந்த ஆபிரஹாம் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும். கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பணியிடங்களில் சம ஊதியம் நிலவுகிறது! ‘நெளக்ரி’ ஆய்வில் மூன்றில் 2 பெண்கள் கருத்து!

சநாதனத்தை வீழ்த்த வேண்டும்: தொல். திருமாவளவன்

ஐக்கிய ஜனதா தளத்தில் இன்று இணைகிறாா் நிதீஷ் மகன் நிஷாந்த்! துணை முதல்வராக தோ்வு செய்ய கட்சி முடிவு!

மத்திய அரசு நிதி தராததால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறுத்தம்: அமைச்சா் கே.என். நேரு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

