விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்க நிலங்களை வழங்க விவசாயிகள் முன் வரவேண்டும் என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் அளித்தவர். தற்போது டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை வருவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். நிச்சயமாக வெகுவிரைவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
டெல்டா மாவட்டங்களில் நிலம் கிடைப்பது கடினமாக உள்ளது. யாரேனும் நிலத்தை கொடுக்க வந்தால் மிகவும் மிகழ்ச்சி. தொழிற்பேட்டைகள் அமைய பெரிய அளவில் நிலங்கள் தேவையில்லை, சிறிய அளவில் நிலங்கள் இருந்தாலே போதும். விவசாயம் சார்ந்த மதிப்புக் கூட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சிறப்பான திட்டங்கள் வெகு விரைவில் டெல்டா மாவட்டங்களுக்கு வரும். அறுவடைக்குப் பிறகு அதனை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும். நெல்லை மட்டுமே நாம் நம்பியுள்ளோம். அதனை தவிர்த்து குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து அதனை இங்கேயே மதிப்புக் கூட்டு பொருளாக மாற்ற ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.
மூத்த உறுப்பினர்கள் உள்ளபோது, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளதைப் பற்றிக் கேட்டதற்கு, 'டெல்டாகாரன் என்று முதலமைச்சர் கூறினார். அப்படியானால் நாங்கள் அனைவரும் அமைச்சர்கள்தான். இது எங்கள் அனைவருக்கும் கிடைத்த பதவி' எனவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0

ஜேகே பேப்பர் முதல் காலாண்டு நிகர லாபம் 63% உயர்வு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


