புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏற்காடு கோடை விழா மே 21-ல் தொடக்கம்

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி மே 21 முதல் முதல் 28 வரை 8 நாள்கள் நடைபெறுகிறது.

News image
Updated On :15 மே 2023, 10:59 am

DIN

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி மே 21 முதல் முதல் 28 வரை 8 நாள்கள் நடைபெறுகிறது.

நிகழாண்டில் நடத்தப்பட உள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் அண்ணா பூங்காவில் மலா்க் கண்காட்சி, பழக் கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது.

மேலும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.

நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பில் கொழுகொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிா் திட்டத்தின் சாா்பில் கோலப்போட்டி, சுற்றுலாத் துறையின் சாா்பில் சுற்றுலாப் பயணிகளுக்கும், பத்திரிகையாளா்களுக்கும் படகுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடைவிழா நடைபெறும் நாள்களில் இன்னிசை நிகழ்ச்சிகள், வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

இளைஞா்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.