தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

களிமண் குளிர்சாதனப் பெட்டி! கோவையில் ஆர்வமுடன் வாங்கும் மக்கள்

கோவையில் மின்சாரமின்றி இயங்கக்கூடிய களிமண்ணால் செய்யப்பட்ட குளிர்சாதனப் பெட்டியை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

News image
Updated On :17 மே 2023, 12:56 pm IST

கோவையில் மின்சாரமின்றி இயங்கக்கூடிய களிமண்ணால் செய்யப்பட்ட குளிர்சாதனப் பெட்டியை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

மின்சாரம் இல்லாமல் இயற்கையான பழங்கால வாழ்வியல் முறையை பின்பற்றி மக்கள் நோய் இல்லாமல் வாழ வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு குஜராத்  மாநிலத்தை சேர்ந்த மன்சுக்பாய் பிரஜபதி என்பவர் களிமண்ணால் குளிர்சாதனப் பெட்டியைக் கண்டிபிடித்துள்ளார். இந்த மிட்டி கூல் எனும் குளிர்சாதன பெட்டி மின்சாரம் இல்லாமல் இயங்குகிறது, வளரும் நாடுகளில் உள்ள கிராமப்புற சமூகங்களுக்கு மலிவு விலையில் குளிரூட்டும் மாற்றாக செயல்படுகிறது.

இது மின்சாரம் அல்லாத குளிர்சாதன பெட்டியாகும். இது நீரின் ஆவியாதல் மூலம் மட்டுமே குளிர்விக்கப்படுகிறது. களிமண் குளிர்சாதனப் பெட்டியின் மேல் அறை, குளிர்சாதனப் பெட்டியின் பக்கவாட்டில் மெதுவாகச் சொட்டி ஆவியாகி நீரை சேமிக்கப் பயன்படுகிறது. இந்த ஆவியாதல் கணிசமான குளிரூட்டும் விளைவை உருவாக்க சுற்றுப்புறத்திலிருந்து ஆற்றலை ஈர்க்கிறது. உள்ளே இருக்கும் சேமிப்பு அறைகளில் இருந்து வெப்பத்தை அகற்றி அவற்றை குளிர்ச்சியாக வைக்கிறது. தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, உணவு, காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை இயற்கையாகவே பல நாட்கள் வைத்திருக்க முடியும் என்கின்றனர்.

Story image

குளிர்சாதனப் பெட்டி வெள்ளை களிமண்ணால் ஆனது, வழக்கமான பராமரிப்பு தேவையை நீக்கும் ஒரு எளிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மின்சாரம் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில், களிமண் குளிர்சாதனப் பெட்டி நம்பகமான குளிரூட்டும் சேமிப்பு விருப்பத்தை வழங்குகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்தை மையமாக கொண்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் களிமண்ணால் செய்யப்பட்ட இயற்கை குளிர்சாதனப் பெட்டியாகும்.

இந்நிலையில் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் இயற்கை சார்ந்த களிமண் பொருட்களை தனது சிறு வயதில் இருந்து செய்து மலிவு விலையில் கொடுத்து வருகிறார். தற்போது இந்த குளிர்சாதனப் பெட்டியை ஆர்வமுடன் மக்கள் வாங்கிச் செல்வதாக கூறுகிறார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், 'தினமும் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் போதுமானது. காய்கறிகள், பழங்கள், பால், குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் பல பொருட்களை வைத்துக் கொள்ளலாம். உள்ளே வைக்கும் காய்கறிகள் பழங்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மற்றும் உணவுப் பொருட்கள் ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை கெடாமல் சுவை மாறாமல் இருக்கும். இதன் மூலமாக 10 லிட்டர் குளிர்ந்த தண்ணீரை சேமிக்க முடியும். மருந்துப் பொருட்களும் பாதுகாக்க வைக்க முடியும். பராமரிப்பு செலவு இல்லை. மின்சார குளிர்சாதனப் பெட்டியை விட பல மடங்கு ஆரோக்கியமானது. இதில் வைத்து சமைப்பதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் உயர்வடைகிறது. களிமண் குளிர்சாதனப் பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைக்கும் என்கின்றனர். கரோனாவிற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், தற்போதுதான் விற்பனை சூடுபிடித்துள்ளதாகவும் தெரிவித்தார். வெளி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் நம்மூரில் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்க யோசித்து வருகிறார்கள். ஆனாலும் தமிழ்நாடு, கேரளம் மாநிலத்தில் தொடர்ந்து ஆடர்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இப்போதைக்கு ஒன்றின் விலை 8 ஆயிரத்து 500 லிருந்து விற்பனை செய்து வருவதாகவும் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.