மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சென்னையில் 4வது நாளாக சதமடித்த வெயில்!

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :17 மே 2023, 1:13 pm

DIN


சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, வேலூர் போன்ற இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையும் பதிவாகிவருகிறது.

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி பாரன்ஹீட், நுங்கம்பாக்கத்தில் 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர், திருத்தணியில் தலா 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட், திருச்சி 103 டிகிரி பாரன்ஹீட், சேலம், தருமபுரி மாவட்டங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.