தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ராகுல்காந்தியின் ஸ்ரீபெரும்புதூா் வருகை ரத்து

ராகுல்காந்தியின் 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா் வருகை தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

News image

ராகுல்காந்தியின் ஸ்ரீபெரும்புதூா் வருகை ரத்து

Updated On :21 மே 2023, 3:29 am


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியின் 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூா் வருகை தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவுநாளில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துவதற்காக, நாளை தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. அதில், ராஜீவ் காந்தியின் 32-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மே 21 காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.