எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மது ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களிலும் வருமானவரித் துறை சோதனை

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் மது ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :26 மே 2023, 3:42 am

DIN

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் மது ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது தம்பி அசோக் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்தபோது வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது இந்த  வழக்கு உச்சநீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து கரூரில் ராமேஸ்வரப் பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதுபோல டாஸ்மாக் ஒப்பந்ததார்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

சென்னை, கோவை, கரூர் என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.