பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித் துறை சோதனை

தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

News image

கரூர் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு

Updated On :26 மே 2023, 4:47 am

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது தம்பி அசோக் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் வி.செந்தில் பாலாஜி. கரூரைச் சேர்ந்த இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்தபோது வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது இந்த  வழக்கு உச்சநீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கரூரில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடான ராமேஸ்வரப் பட்டியில் இருக்கும் அவரது பெற்றோர் வசிக்கும் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோவை, கரூர் என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.