தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் தமிழ்வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
2023-2024 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சில தமிழ், ஆங்கில வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
பின்னர் இதுகுறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் மட்டும் அனைத்து உறுப்புக் கல்லூரிகளில் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறும் என்றும் இதனை நிறுத்திவைப்பது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்வோம் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது. திராவிட மாடல் அரசு தாய்மொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும்.
மேலும் பல பாடப்பிரிவுகளை தமிழ்வழியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் புதிய பாடங்கள் தொடங்கப்பட்டால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடாமல் இருக்கவே துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறோம். இதுதொடர்பான மசோதா ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பொலிவியா: கரன்சி ஏற்றிச் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து! 15 பேர் பலி; 30 பேர் காயம்

டாக்ஸிக் முதல் பாடல் எப்போது? கியாரா அத்வானி வெளியிட்ட போஸ்டர்!
குடும்ப பிரச்னை: மகனை கொலை செய்த தாய் தற்கொலை முயற்சி
சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

