ஏற்காடு கோடை விழா வாண வேடிக்கைகளுடன் நிறைவு!

எட்டு நாள்களாக நடைபெற்று வந்த 46-ஆவது மலா்க் கண்காட்சி கோடை விழா வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெற்றது. 
ஏற்காடு கோடை விழா வாண வேடிக்கைகளுடன் நிறைவு!
Published on
Updated on
2 min read


சேலம்:  எட்டு நாள்களாக நடைபெற்று வந்த 46-ஆவது மலா்க் கண்காட்சி கோடை விழா வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெற்றது. மலா்க் கண்காட்சியைக் காண நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 46-ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மே 21-ஆம் தேதி தொடங்கியது. பள்ளி மாணவா்களுக்கு கோடை விடுமுறை என்பதால் கண்காட்சித் தொடங்கிய நாள் முதலே ஏழைகளின் உதகையான ஏற்காடுக்கு மலா்க் கண்காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்த வண்ணம் இருந்தனா். 8 நாள்களாக நடைபெற்ற கோடை விழாவில் சுற்றுலா பணிகளை கவரும் வகையில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பட செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து ஏற்காட்டின் அழகை கண்டு ரசித்தனர். ஏற்காட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டதோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் மாறியது. 

எட்டு நாள்கள் நடைபெற்ற இக்கண்காட்சியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கோடை விழாவில் சிறப்பான முறையில் பணியாற்றிய பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஆட்சியர் சால்வை  அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் கோடை விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசுகையில், ஏற்காடு கோடை விழாவை, சுமார் 1 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்துள்ளனர். ஏற்காடு ஏரியில், வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்று அமைக்கப்படவுள்ளது. இது அடுத்த ஆண்டு கோடைவிழாவில் இடம் பெறும். ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு வசதியாக. சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சூழலியல்  சுற்றுலா பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது நாள்தோறும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை புறப்பட்டு, ஏற்காட்டில் சேர்வராயன் மலை, ராஜா தோட்டம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, பக்கோடா காட்சிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துதிரும்பும் வகையில் இந்த  ஆண்டு முதல் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

கோடை விழாவில் சிறப்பான பங்களிப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இனிவரும் காலங்களில் ஏற்காட்டில் இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க கூடுதல் வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து எட்டு நாள்கள் நடைபெற்ற கோடை விழாவில் சிறப்பான முறையில் பணியாற்றிய பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை  அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும், கோடை விழாவில் சிறப்பான பங்களிப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்

விழாவில்  ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் கோட்டாட்சியர் மாறன்,  தோட்டக்கலை துணை  இயக்குநர் தமிழ்ச்செல்வி,  மாவட்ட சுற்றுலா அலுவர் உமாதேவி மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.