ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருக்கா வினோத்துக்கு நவ.15 வரை நீதிமன்றக் காவல்

ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

News image
கருக்கா வினோத்
Updated On :1 நவம்பர் 2023, 3:03 pm

DIN

ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையின் முதலாவது நுழைவு வாயில் முன்பு புதன்கிழமை (அக்.25) இரு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியதாக, நந்தனம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத்தை காவல் துறையினர் கைது செய்தனா். 

இவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்றும், தற்போது பிணையில் வெளியே வந்திருந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கருக்கா வினோத்துக்கு 3 நாள்கள் விசாரணைக் காவல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கருக்கா வினோத்துக்கு 3 நாள்கள் விசாரணைக் காவல் முடிந்த நிலையில், இன்று மீண்டும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.