வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.1லட்சத்து 800 போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக நாகை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையும் படிக்க | வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் சார் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையில், அங்கிருந்த பதிவாளர் பாபுவிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சுமாா் ரூ.56 ஆயிரமும், ஆவண எழுத்தர் சந்திரசேகர் என்பவரிடமிருந்து ரூ.44 ஆயிரத்து 800 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை கைப்பற்றிய போலீசார் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







