

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய கூடுதல் இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அதே வேளையில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வடமாநிலங்களில் ஒரு சில இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
தொடர்மழையால் அலுவலகம் செல்வோர், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் தென் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.