/

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,600-க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

News image
கோப்புப்படம்
Updated On :3 நவம்பர் 2023, 6:21 am

DIN

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை(நவ.3) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,700-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,695-க்கும், ஒரு சவரன் ரூ.45,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிக்க |லேபில் புதிய டிரைலர்!

அதேபோன்று, வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.70 காசுகள் குறைந்து ரூ.77.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.700 குறைந்து ரூ.77,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.