ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடி புதுமணத் தம்பதி கொலையில் மேலும் 2 பேர் சரண்

தூத்துக்குடியில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் வள்ளியூர் நீதிமன்றத்தில் மேலும் 2 பேர் சரணடைந்தனர். 

News image
கோப்புப் படம்.
Updated On :4 நவம்பர் 2023, 10:27 am

DIN

தூத்துக்குடியில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் வள்ளியூர் நீதிமன்றத்தில் மேலும் 2 பேர் சரணடைந்தனர். 

தூத்துக்குடி முருகேசன் நகரைச் சோ்ந்த வசந்தகுமாா் மகன் மாரிசெல்வம்(24). இவரும் திருவிக நகரை சோ்ந்த முத்துராமலிங்கம் மகள் காா்த்திகா (20) என்பவரும் இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதற்கு பெண் வீட்டில் எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடந்த அக்.30இல் அவா்கள் திருமணம் செய்துகொண்டனா். இந்த நிலையில், முருகேசன் நகரில் உள்ள வீட்டில் மாரிசெல்வமும், காா்த்திகாவும் வியாழக்கிழமை இருந்தபோது, 3 பைக்குகளில் வந்த 6 போ் அவா்கள் இருவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினா்.

சிப்காட் போலீஸாா், அவா்களது சடலங்களைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாவட்ட எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன், ஊரக டிஎஸ்பி சுரேஷ், நகர டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். போலீஸாா் குவிப்பு: கொலையுண்ட தம்பதியின் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், இருவீட்டாரும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால், பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பின்னா், இருவரின் உடல்களும் மாரிசெல்வம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இச்சம்பவத்தில் தொடா்புடையதாக கருதப்படும் காா்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் (47), கே.வி.கே. நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23), சங்கா் காலனியை சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (27), ஒரு சிறுவன் ஆகியோரை 3 போ் அடங்கிய தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கார்த்திகாவின் தந்தை உட்பட 4 பேர் ஏற்கெனவே கைதான நிலையில் கருப்பசாமி, பரத் விக்னேஷ்குமார் ஆகியோர் வள்ளியூர் நிதிமன்றத்தில் சரணடைந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.