
பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளார்.
இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்பு வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிா்வாகம் ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்க கடந்த இரண்டு நாட்களாக தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் நீா்ப்பிடிப்பு வனப்பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 6,000 கன அடியாக சரிந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து சரிந்து காணப்படுகிறது.
இதையும் படிக்க | அடுத்த ஆண்டு 24 நாள்கள் அரசு பொது விடுமுறை
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளாா். கடந்த இரண்டு நாட்களாக பரிசல்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டபோதிலும் ஒகேனக்கல் வந்திருந்த சொற்ப அவிலான சுற்றுலாப் பயணிகள் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர்.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து அளவுகளை தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.