குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கீழையூர் அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: இளைஞர் அடித்துக் கொலை 

சீட்டுக்கட்டு விளையாடிய கும்பலுக்கும் மது அருந்திய கும்பலுக்கும் இடையே தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட

News image

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்

Updated On :13 நவம்பர் 2023, 9:51 am IST

கீழையூர் அருகே சீட்டுக்கட்டு விளையாடிய கும்பலுக்கும் மது அருந்திய கும்பலுக்கும் இடையே தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி அடுத்த  சிந்தாமணி கிராமத்தில் உள்ள சாமியார் பண்ணை குளப்பகுதியில்  காரப்பிடாகையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். 

இந்தநிலையில் அதே பகுதியில் சிந்தாமணி காலணி தெரு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சீட்டுக்கட்டு விளையாடி கொண்டும் இருந்துள்ளனர். அப்போது மது போதையில், இருந்த காரப்பிடாகை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சீட்டு விளையாடுவதை போட்டோ எடுத்து போலீசாருக்கு அனுப்புவோம் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அது மோதலாக மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் காரப்பிடாகை கிராமத்தை சேர்ந்த 28 வயதான  விஜயக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போது  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதையும் படிக்க | குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றதை அடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும்ஷ இந்த தாக்குதல் சம்பவத்தில் காலணி தெருவை சேர்ந்த சஞ்சய், விக்னேஷ்வரன் உள்ளிட்ட 3 பேர் நாகை, திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே சம்பவம் தொடர்பாக மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்து 8 பேர் கைது செய்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் சம்பவ இடத்தினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து இரு சமூகத்துக்கு இடையே பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

நாகை அருகே  இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌‌.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.