தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 15) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:50 am IST


புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 15) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், நாளையும் கனமழை வாய்ப்புள்ளதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், டெல்டா மாவட்டங்களான  நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

இதேபோன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.