நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த நவ. 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்றது.
அப்போது, ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது' என்றும் கூறியிருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10க்கும் மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக வருகிற நவ. 18 ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் சிறப்புக் கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இதையும் படிக்க | 10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி!

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS

டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி வருவாய் ஆய்வாளர் உள்பட இருவர் பலி

ஈரான் - அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்! - இந்தோனேசியா அறிவிப்பு!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

