திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மசோதாக்களின் சிக்கல்களை அரசு ஆராய வேண்டும்: இபிஎஸ் - அப்பாவு வாதம்!

மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :18 நவம்பர் 2023, 12:25 pm IST

மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

முதல்வர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். 

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பலாமா? மீண்டும் அனுப்பப்படவுள்ள 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். 3 ஆண்டுகளுக்கு பிறகு மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூறுவதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.