
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.
தமிழகத்தின் முதல்வர் வேந்தராக இருக்கும் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவானது சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றும் போது, 1962-ஆம் ஆண்டு தெய்வத்தின் தெய்வம் படத்தில் பாடகி சுசிலா பாடிய ‘நீ இல்லாத உலகத்திலே’ பாடலை பாடினார்.
மேலும், ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியத்தை ரூ. 3 கோடியாக உயர்த்தியும், ஆராய்ச்சி மையத்தின் நூலகத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.