

த்ரிஷா தொடர்பாக சர்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா் அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் கருத்து தெரிவித்தாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
மன்சூா்அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் கடந்த 20-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், மன்சூா் அலிகான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் கடந்த 21-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக விசாரணை நடத்த மன்சூா் அலிகானுக்கு காவல் துறையினர் அழைப்பாணை அனுப்பினா். அதன்படி, நேற்று (நவ.23) பிற்பகல் 2.45 மணியளவில் ஆயிரம் விளக்கு மகளிா் காவல் நிலையத்தில், ஆய்வாளா் தனலட்சுமி முன்னிலையில் நடிகா் மன்சூா் அலிகான் ஆஜரானாா்.
இந்நிலையில், மன்சூா் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க: ரூ.5-ல் பயணம்: அதிரடி சலுகையை அறிவித்த சென்னை மெட்ரோ!
இவ்வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.