

கணவா் சிறையில் உள்ள நிலையில் பிள்ளைகளின் படிப்புக்காக பணம் திரட்டுவது சிரமமாக உள்ளதால், பணம் திரட்டுவதற்கு ஏதுவாக கணவரை விடுப்பில் அனுப்ப வேண்டுமென கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா் மற்றும் சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.நதியாவும், சிறை நிா்வாகம் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் இ.ராஜ்திலக்கும் ஆஜராகி வாதிட்டனா்.
இதையடுத்து செந்தில்குமாருக்கு 28 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா். கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை காலை நேரத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.