நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மருத்துவமனையில் இருந்து சி.விஜயபாஸ்கர் வீடு திரும்பினார்

ப்ளூ காய்ச்சல் காரணமாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :26 நவம்பர் 2023, 1:14 pm

DIN


திருச்சி: ப்ளூ காய்ச்சல் காரணமாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

இந்தநிலையில், ப்ளூ காய்ச்சல் தொற்று பாதிப்பால் சனிக்கிழமை மதியம் (நவ.25) திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை(நவ.26) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.