தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்!

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை (நவ. 27) திறந்து வைத்தார்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 5:52 am

DIN


சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை (நவ. 27) திறந்து வைத்தார்.

விழாவில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினா் மற்றும் தமிழக அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனர். சிலையை திறந்து வைத்த பிறகு, அமைச்சர் உள்ளிட்ட அனைவருடனும் வி.பி. சிங் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

வி.பி. சிங் குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ்

வி.பி. சிங் குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ்

அதனைத் தொடர்ந்து வி.பி. சிங் குடும்பத்தினர் சார்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. 

சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

பிரதமராக இருந்தபோது தமிழக மக்களின் வாழ்வதாரப் பிரச்னையான காவிரி நதிநீா் பிரச்னைக்கு தீா்ப்பாயத்தை அமைத்து தந்தாா் வி.பி. சிங்.

சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜா் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினாா்.

சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை வி.பி.சிங் செயல்படுத்தினாா்.

சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், அவரின் சிலையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.