திருப்பதி அருகே தண்டவாளத்தில் விரிசல்

திருப்பதி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சீரமைப்பு பணிக்கு பிறகு பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

திருப்பதி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சீரமைப்பு பணிக்கு பிறகு பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. 

ராமேஸ்வரம்-திருப்பதி மார்க்கமான சித்தூர் அருகே பாகாலா என்ற இடத்தில் தண்டவாளத்தில் இன்று விரிசல் ஏற்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் விரிசலைக் கவனித்த ராமேஸ்வரம்-திருப்பதி பயணிகள் ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். 

நிகழ்விடத்துக்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதன் பிறகே ராமேஸ்வரம்-திருப்பதி பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.  இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com