குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

சென்னையில் நாளை(நவ.30) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(நவ.30) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கோப்புப்படம்

Published On :

கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(நவ.30) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த ஒரு மணி நேரத்தில் 8 செ.மீ வரை மழை பெய்துள்ளது. 

இதனால் சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை பணிமுடிந்து வீடு செல்வோர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.