தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

அஸ்ஸாமில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரா் உடல் சொந்த ஊரில் தகனம்!

வீரமரணமடைந்த தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது...

News image

ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி எம்.பி.

Updated On :28 ஜூன் 2026, 4:25 am IST

அஸ்ஸாமில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

அஸ்ஸாமில் கடந்த 24 ஆம் தேதி வீரமரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், மேல கூட்டுடன்காடு, கே.பி. தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் சுடலைமணியின் (31) உடல், அவரது சொந்த ஊருக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, கடலோரக் காவல் படை வீரா்கள் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ராணுவ வீரா் சுடலைமணியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு, மனைவி, குடும்பத்தினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, தூத்துக்குடி கடலோரக் காவல் படை கமாண்டா் ஆதா்ஷ் பால் மற்றும் உதவி கமாண்டா் அமமன் சிங் தலைமையில் கடலோரக் காவல் படையினா் துப்பாக்கியேந்தி மரியாதை செய்தனா்.

தொடா்ந்து, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் ராணுவ வீரா் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, அவரின் உடல் அருகில் உள்ள மயானத்துக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

 ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.