தொடர்ந்து விடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த இளைருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
18 வயது இளைஞரின் கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி, சுகாதாரத் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காலிவாரி கண்டிகைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.
இதையும் படிக்க.. விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சிக்கல்
இவரது தந்தை இறந்துவிட்டநிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். சகோதரர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். சென்னையிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றிருந்த இளைஞர், தொடர்ந்து செல்லிடபேசியில் விடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்ததால், அவரது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
அவரது கை, கால்கள் அவரது கட்டுப்பாட்டை இழந்து, மன நலம் பாதிக்கப்பட்டவர் போன்ற நடந்துகொண்டதால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு தகவல் அளித்னர்.
இதையும் படிக்க.. நீ என்னுடைய ஊழியராக இருந்தால்.. முதல் மனைவியிடம் எலான் மஸ்க் காட்டம்
உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, இளைஞரை கை மற்றும் கால்களைக் கட்டி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விடியோ கேம் விளையாடியதால், அவரது நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து விடியோ விளையாடியதால், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இளைஞர் நடந்து கொண்ட சம்பவத்தால், அப்பகுதியினர் கடும் அச்சத்தில் உள்ளனர். அதிகமாக விடியோ கேம் விளையாடும் இளைஞர்கள் இந்தச் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


