சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம்: அண்ணாமலை

தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 அக்டோபர் 2023, 3:53 pm

DIN

தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது என்று குற்றம்சாட்டினார். 

மேலும் கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநீதியானது என்றும் கோயில்களில் வரும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி, தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டப்படுவது குறித்துக் கூறியிருப்பது மிகச் சரியே. கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.