உலகக்கோப்பை கிரிக்கெட்: வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை இடையே சிறப்பு ரயில்கள்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகின்றன. நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
ஏற்கெனவே வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து மூன்று முறை உலகக் கோப்பை போட்டியை நடத்தியுள்ள இந்தியா, இந்த முறை தனியாக நடத்துகிறது.
மொத்தம் 48 நாள்கள் நடைபெறும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியே, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அக். 8, 13, 18, 23, 27 ஆகிய தேதிகளில் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...