கரூரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை! 

கரூரில் இரண்டு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை! 

கரூர்: கரூரில் இரண்டு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படை காவல்துறையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம்,  வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது.

 கடந்த மாதம் 12-ஆம் தேதி இந்த இரண்டு மணல் குவாரியின் அலுவலங்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் உள்ள மணல் கிடங்கு  அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 1 மணல் குவாரி என மூன்று குவாரிகளின் ஆவணங்களை கைப்பற்றி சோதனை செய்தனர். இரண்டு நாள்கள் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. 

மேலும், போலி ஆவணங்களை வைத்து, அரசு அனுமதித்த அளவை மீறி மணல் அள்ளப்பட்டு அரசுக்கு இழப்பீடு செய்யப்பட்டதாக கூறி விசாரணை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தற்போது வரை கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இரண்டு மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளது.

தற்போது நன்னியூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

6 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணவப் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com