மழை இல்லாதபோதும் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து: விவசாயிகள் சந்தேகம்

முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாதநிலையிலும் நீர்வரத்து அதிரித்து உள்ளது தமிழக விவசாயிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மழை இல்லாதபோதும் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து: விவசாயிகள் சந்தேகம்

கம்பம் : முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாதநிலையிலும் நீர்வரத்து அதிரித்து உள்ளது தமிழக விவசாயிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில 4  நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யவில்லை. அதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. குறிப்பாக அக். 7 இல் அணைக்குள் வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இந்த நிலையில் அக். 9 இல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 8.0மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 37.6 மி.மீ., மழையும் பெய்தது.  அதனால் அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 834.83 கன அடியாக வந்தது.

அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனாலும் அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 1104.81 கன அடியாக வந்தது. 

மழை பொழிவு இல்லாத நேரத்தில் அணையில் நீர்வரத்து அதிகரித்து இருப்பது தமிழக விவசாயிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.யிடம் புகார்
இதுபற்றி பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறும் போது, பல முறை கூறியுள்ளோம் முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை கேரள அரசு சப்பாத்து, வண்டிப்பெரியாறு வழியாக திருப்பிவிட்டுள்ளது என்று. தற்போது அதையும் மீறி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருவது நாங்கள் கூறியது உண்மையாகியுள்ளது. 

மேலும் முல்லைப்பெரியாறு அணை பற்றி கேரளத்துக்குள் அவதூறு பரப்பும் வழக்கறிஞர் ரசூல்ஜோய் உள்ளிட்ட 8 அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விவசாய சங்கம் சார்பில் புகார் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.

அணை நிலவரம்
முல்லைப்பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர் மட்டம் 121.60 அடி (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 2944.80 மில்லியன் கன அடி, நீர்வரத்து வினாடிக்கு 1104.81 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 400 கன அடியாகவும் இருந்தது. லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி 36 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com