
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,265 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்புப் பேருந்துகளை முன்பதிவு செய்ய www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc official என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.