/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :16 அக்டோபர் 2023, 6:28 am

DIN

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  அக்டோபர் 16-(திங்கள்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240-க்கும், ஒரு கிராம் ரூ.5,530-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு சவரன் ரூ.44,440-க்கும், ஒரு கிராம் ரூ.5,555-க்கும் விற்பனையானது.

அதேசமயம், வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.77.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.