மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பள்ளிச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்

தன்னைப் பார்க்க வேண்டும் என்ற பள்ளிச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிவைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

News image
Updated On :18 அக்டோபர் 2023, 10:58 am

DIN

மறைமலைநகர்: தன்னைப் பார்க்க வேண்டும் என்ற பள்ளிச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிவைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தன்னை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட பள்ளிச் சிறுவன் சந்தோஷின் விருப்பத்தை இன்று நிறைவேற்றியுள்ளார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட ஆய்வு கூட்டத்திற்கு செல்லும் வழியில் மறைமலைநகர் பகுதியில் சிறுவன் சந்தோஷை நேரில் சந்தித்துப்பேசினார்.

அப்போது, சிறுவன் சந்தோஷுக்கு, 'திருக்குறள் உரை' புத்தகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கையெழுத்திட்டு வழங்கியதோடு, சாக்லேட் கொடுத்து சிறுவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

சென்னை நாவலூர் சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் நாளை(அக். 19) முதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். 

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.