
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபா் 21, 22 ஆம் தேதிகளில் சனி, ஞாயிறு, 23 ஆம் தேதி ஆயுத பூஜை, 24 ஆம் தேதி விஜயதசமி என தொடா் விடுமுறையையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி நாளை(அக். 20) முதல் 23 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் இந்த நாள்களில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மீறி விடுப்பு எடுத்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








