கோவை அருகே 33 மயில்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை
கோவை சுல்தான்பேட்டை அருகே வதம்பச்சேரியில் உள்ள விவசாய நிலங்களில் 33 மயில்கள் அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சுல்தான்பேட்டை அருகே வதம்பச்சேரியில் உள்ள விவசாய நிலங்களில் 33 மயில்கள் அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சுல்தான்பேட்டை அருகே வதம்பச்சேரியில் சண்முகராஜுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 17 மயில்களும், ராமசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 12 மயில்களும், கந்தசாமிக்கு சொந்தமான நிலத்தில் 2 மயில்கள் என 33 மயில்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்தன.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை வனத்துறை அலுவலர்கள் மயில்களின் உடல்களை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து
இறந்த மயில்களை மதுக்கரை வனத்துறை அலுவலகத்துக்கு உடல்கூறு ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாய நிலங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் 33 மயில்கள் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...