அடுத்த 2 நாள்களில் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை!
வடகிழக்குப் பருவமழை 2 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்குப் பருவமழை 2 நாள்களில் தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்தியப் பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலுக் குறைந்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: 12 ராசிக்கான வாரப் பலன்கள்!
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...