12 ராசிக்கான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 20-26 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்கான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (அக்டோபர் 20-26 ) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும்.  பெற்றோருக்கு மருத்துவச் செலவு செய்ய நேரிடும். விட்டுக் கொடுத்து நடப்பீர்கள்.  சிறிது விரயங்கள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக மாட்டீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.  விவசாயிகள் பொறுப்புடன் செயல்படுவீர்கள்.  அரசியல்வாதிகள் பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

கலைத் துறையினர் அவமானங்களைப் பொருட்படுத்த மாட்டீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரம் உயரும். சேமிப்பை உயர்த்துவீர்கள்.  பெரியோர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரிகள் எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள்.  விவசாயிகள் கால்நடைகளுக்கு மருத்துவச் செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 20, 21.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குறைகளை  நிறைகளாக்குவீர்கள்.  காரியங்களைத் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள்.  எதிர்ப்புகள் இருக்காது.  குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விவசாயிகள் புதிய நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பார்கள்.

அரசியல்வாதிகள் காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.  கலைத் துறையினரின் பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 22, 23.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலை லாபகரமாக நடத்துவீர்கள்.  எதிர்காலக் கவலைகள் மனதை வாட்டும். பெரியோர்களின் சந்திப்பால் மகிழ்வீர்கள். பெற்றோரும் மனதுக்கு இதமாக நடப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் பிறரால் பாராட்டப்படுவார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.  விவசாயிகளுக்குப் பால் வியாபாரத்தில் வருவாய் கிடைக்கும்.  

அரசியல்வாதிகளை பிறர் பாராட்டுவார்கள். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  

பெண்கள் கவனமாகப் பேசவும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பார்கள்.

சந்திராஷ்டமம் - அக். 24, 25.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பணம் கையில் தாராளமாகப் புழங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்படும்.  கடன் கொடுக்கும்போது கவனமாகச் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சுமுகமாக நடக்கவும். வியாபாரிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் காரியங்களில் வெற்றி பெறுவார்கள். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.

பெண்கள் குழப்பங்களைச் சமாளிப்பார்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - அக். 26.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கடன்களை வசூலிப்பீர்கள். தொழிலைக் கட்டுப்பாட்டுடன் நடத்துவீர்கள். மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும்.  வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். விவசாயிகள் புதிய குத்தகை எடுப்பதைத் தவிர்க்கவும்.  

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.  கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்கள் உறவினர்கள் வருகையால்  மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் நன்கு படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

பொருளாதாரம் உயரத் தொடங்கும். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.  பிறரால் புகழப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடமிருந்த மனக்கசப்புகள் நீங்கும். 

வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு நண்பர்கள் உதவியாக  இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு சிறப்பான வளர்ச்சி உண்டு.

கலைத் துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பெண்கள் எதிர்காலத்துக்காகச் சேமிப்பீர்கள்.  மாணவர்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நல்லவர்களின் தொடர்பும் அதனால் நல்ல பயனும் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தொழிலை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்வீர்கள். 

கற்பனைத் திறன் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் புதிய பயிற்சிகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவார்கள். விவசாயிகள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் நல்ல பெயரை எடுப்பார்கள்.  கலைத் துறையினரின் வருவாய் உயரும்.

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவார்கள். மாணவர்கள் பொதுக் காரியங்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உற்சாகத்துடன் தொழிலில் ஈடுபடுவீர்கள். புதியவர்களிடம் ஜாக்கிரதையாகப் பழகவும்.  வீண் விவகாரங்களில் தலையிட மாட்டீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சீரான நிலையை காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நிதானமாகச் சாதிப்பீர்கள். கலைத் துறையினர் பிறரை மதித்து நடப்பீர்கள்.

பெண்கள் குழந்தை பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவீர்கள். மாணவர்களின் திறமைகள் பளிச்சிடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தன்னம்பிக்கையும் தனித்திறனும் வெளிப்படும். தொழில் நிமித்தமான பயணம் உண்டாகும். எண்ணங்கள் நிறைவேறும். புகழும் அந்தஸ்தும் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகளின் பெருமை அதிகரிக்கும். விவசாயிகள் கொள்முதலில் கூடுதல் வருவாயைக் காண்பார்கள். ]

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரும் பாராட்டும்படி நடப்பீர்கள்.  கலைத் துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் வெற்றிப் படியை எட்டுவீர்கள்.  சிந்தித்து செயல்படுவீர்கள்.  உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சுமுகமாக நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்ப்புகள் மறையும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் செழிப்பாகவே தொடரும்.

அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள்.  கலைத் துறையினர் புதிய நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

பெண்கள் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தினரிடையே ஆதரவு அதிகரிக்கும். அரசு சலுகைகள் கிடைக்கும். புதிய உத்வேகம் கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தியாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகள் முன்னேற்றமான சூழலைக் காண்பீர்கள். 

விவசாயிகள் கடன்களை அடைக்க முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். கலைத் துறையினரின் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும்.  

பெண்கள் குடும்பப் பிரச்னைகளைச் சாதுரியமாகத் தீர்ப்பீர்கள். மாணவர்கள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com