/

தங்கம் விலை 4 நாள்களில் ரூ.1,240 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ80 உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாள்களில்  மட்டும் தங்கம் விலை ரூ.1,240 வரை உயா்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :21 அக்டோபர் 2023, 6:54 am

DIN

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ80 உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாள்களில்  மட்டும் தங்கம் விலை ரூ.1,240 வரை உயா்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்துள்ளது. 

அதன்படி, சென்னையில் சனிக்கிழமை(அக்.21) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.5,670-க்கும், சவரனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.45,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.1.20 உயர்ந்து ரூ.78.70-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,200 உயர்ந்து ரூ.78,700-க்கும் விற்பனையாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.