சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பா. வேல்துரை (73) செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியம், திருவிதத்தான்புள்ளி ஊராட்சி கங்கனாங்குளம் கிராமத்தில் 17.09.1950இல் பா. வேல்துரை பிறந்தார். இவரது தந்தை பாபநாசபெருமாள் திருவிதத்தான்புள்ளி ஊராட்சியில் 4 முறை தலைவராக இருந்துள்ளார்.
இதையும் படிக்க.. நினைவிழந்து வென்டிலேட்டரில் இருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்
பிஎஸ்சி பட்டதாரியான வேல்துரை, 1980இல் காங்கிரஸ் கட்சியின் சேரன்மகாதேவி வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். அதன் பின்னர், 1989இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டபோது சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர், 1996-இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். 2006இல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011-இல் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட வேல்துரை தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்பு வகித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த வேல்துரை, செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு முத்துக்கனி என்ற மனைவி, சௌந்தர்யா, ஷீலா, அனிதா ஆகிய 3 மகள்களும், வி.பி. துரை என்ற மகனும் உள்ளனர்.
அவரது இறுதிசடங்கு சொந்த ஊரான கங்கனாங்குளத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 94431 71111.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


