தஞ்சை ஆட்சியருக்கு  குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூர் அருகே  அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆ
தஞ்சை ஆட்சியருக்கு  குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ்


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே  அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசாரணை அறிக்கையை ஒருவார காலத்திற்குள் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 14 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி  காலை 11 மணியளவில் வரும் சரண்யா என்ற ஆசிரியை பள்ளி மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது மீது   எங்கிருந்தோ வந்த கல் விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல்துறையில் புகார் எதுவும் தெரிவிக்காத நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளரான அந்த ஆசிரியையின் கணவர், வல்லம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் பள்ளிக்குள் நுழைந்து பிளஸ் 1 மாணவர்கள் 14 பேரை சந்தேகத்தின் பேரில் பள்ளி வளாகத்தில் உள்ள கணினி ஆய்வகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் சுமார் 4 மணி நேரம் மிரட்டி துன்புறுத்தியுள்ளனர். 

விசாரணையின் போது அந்த அறைக்குள் தலைமை ஆசிரியரையோ அல்லது வேறு எந்த ஆசிரியரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. 

இதையறிந்த அம்மாணவர்களின் பெற்றோர் மறுநாள் (ஆக.8) காலை பள்ளியை முற்றுகையிட்டனர்.  இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களை சமாதானம் செய்தார். 

ஆனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் காவல்துறையினருக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த சம்பவத்தை வெளியே தெரியாமல் மூடி மறைத்து விட்டனர். 

பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்கள்

இந்த நிலையில்,  சம்பவம் தொடர்பாக  உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது சிறார் நீதி ( பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினார். 

அவரது புகாரின் பேரில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி  அறிக்கை அனுப்புமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், விசாரணை அறிக்கையை ஒருவார காலத்திற்குள் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com