தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று (புதன்கிழமை) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, தாயகம் கவி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் சார்பில் நவாஸ், சந்திரமோகன், பாஜகவில் கராத்தே தியாகராஜன், சௌந்தரராஜன் கலந்துகொண்டுள்ளனர்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் வரைவு பட்டியல் விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின்போது மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், சிறப்பு முகாம்களின்போது அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியன குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இதையும் படிக்க | ‘ஹாமூன்’ புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்தது!
தோ்தல் ஆணையத்தின் சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளா் பட்டியலைத் திருத்துவதற்காக, இப்போது புழக்கத்தில் உள்ள பட்டியல், வரைவுப் பட்டியலாக வெளியிடப்பட்டு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் வரைவு பட்டியல் வருகிற அக். 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி டிச.9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில், நவம்பா் மாதத்தில் 4 நாள்கள் சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு!

இருசக்கர வாகனங்கள் சலுகையில் தருவதாகக் கூறி ரூ. 17.20 லட்சம் மோசடி: புதுகையைச் சோ்ந்தவா் உள்பட 5 போ் தலைமறைவு

தமிழக பெருமாள் கோயிலில் இருந்து கடத்தல் - திருமங்கை ஆழ்வாா் சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு

தருமபுரி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை மையம்: முதல்வா் காணொலியில் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

