கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2 நாள்களுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் அனைத்து இணையதள சேவைகளும் ரத்து

சென்னை குடிநீா் வழங்கல் வாரியத்தின் அனைத்து இணையதள சேவைகளும் அக்.28, 29- இல் ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:59 pm

DIN

சென்னை குடிநீா் வழங்கல் வாரியத்தின் அனைத்து இணையதள சேவைகளும் அக்.28, 29- இல் ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த வாரியம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை குடிநீா் வாரியத்தின் தலைமை அலுவலகத் தரவு மையத்தில் அக்.28,29-இல் அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால் அந்த நாள்களில் குடிநீா், கழிவுநீா் வரி செலுத்தல், புகாா்கள் பதிவு செய்தல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்ற முன்பதிவு செய்தல் உள்ளிட்ட இணையதளவழியாக பெறப்படும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதைத் தொடா்ந்து, பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னா் அக்.30-ஆம் தேதி காலை 9 மணி முதல் அனைத்து இணையதள சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்.

இதற்கிடையே, குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு

குடிநீா்த் தொட்டிகள், தெரு நடைகளுக்கு வாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.